தருமபுரி அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளில் மரம் நட்டு கொண்டாடிய இளைஞர்கள்!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவிற்குட்பட்ட பாடி கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு கலாம் பசுமை இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் மரம் நட்டு பிறந்த நாளை கொண்டாடினர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவிற்குட்பட்ட பாடி கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு கலாம் பசுமை இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் மரம் நட்டு பிறந்த நாளை கொண்டாடினர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இந்தியா முழுவதிலும் உள்ள மாணவ சமுதாயத்தினர் மரம் நட வேண்டும் என்று முழக்கமிட்டு வந்தார். நமது நாடு பசுமையாக இருக்க வேண்டும் என்றால் மரம் இருக்க வேண்டும் என்று முழக்கமிட்டிருந்தார். அவர் தற்போது மண்ணை விட்டு மறைந்திருந்தாலும் அவரது பேச்சு தற்போதைய இளைஞர்களை ஊக்குவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பாடி கிராமத்தில் உள்ள கலாம் பசுமை இயக்கத்தினர் இன்று மரம் நட்டு பிறந்த நாளை கொண்டாடினர். இந்த விழாவுக்கு பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் வெங்கட்டராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே போன்று அதிமுக மாவட்ட கவுன்சிலர் பி.கே.குட்டி மற்றும் தருமபுரி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளரும் சமூக ஆர்வலருமான ம.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் கலாம் பசுமை பூங்காவில் காவல் ஆய்வாளர் வெங்கட்டராமன் மரம் நட்டு சிறப்பித்தார். இதில் கலாம் பசுமை இயக்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலாம் பசுமை இயக்கத்தினர் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கத்தை சமூக ஆர்வலர் ம.கோவிந்தசாமி வழிநடத்தி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.