ஊட்டியில் தேர்தல் பணியில் இருந்த பெண் போலீசுக்கு தொல்லை கொடுத்த துணை வட்டாட்சியர்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தேர்தல் பணியின் போது பறக்கும் படையில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாருக்கு துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-01-30 09:47 GMT

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தேர்தல் பணியின் போது பறக்கும் படையில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாருக்கு துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி பகுதியில் பறக்கும் படை குழுவில் இணைந்திருந்த பெண் போலீசுக்கு துணை வட்டாட்சியர் பாபு என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பெண் போலீஸ் ஊட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி விசாரணை நடத்தியதில் துணை வட்டாட்சியர் பெண் போலீசுக்கு தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source,Image Courtesy: Puthiyathalaimurai


Tags:    

Similar News