முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ABVP! தஞ்சை மாணவி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு!

Update: 2022-02-14 10:10 GMT

"தஞ்சை  மாணவி தற்கொலை வழக்கில், சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை" என்று குற்றம்சாட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடு முன்பு முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்  ABVP அமைப்பினர்.


தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.. இந்நிலையில் தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கைகளுடன் ABVP அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் நிதித்தி திருப்பாத்தி மற்றும் தேசிய செயலாளர் முத்துலிங்கம் ஆகிய  இருவரது தலைமையில்,  தமிழக முதல்வரின் இல்லம் முன்பு முற்றுகை போராட்டம்  நடைபெற்றது. 


"நீதி வேண்டும் நீதி வேண்டும் கட்டாய மத மாற்றத்தினால்  இறந்த மாணவிக்கு நீதி வேண்டும் !" என்று கோஷங்களுடன் மாணவ-மாணவிகள் ABVP அமைப்பு கொடிகளுடன்,  காவல்துறையின் ஒடுக்கு முறையையும் தாண்டி, முதல்வர் வீட்டு முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.


இம்முற்றகை போர்ட்டத்திற்கு முன்பே,  தமிழக பா.ஜ.க தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் "உச்சநீதிமன்றம், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இனியாவது நமது முதலமைச்சர் இறந்த மாணவியின் பெற்றோரை நேரில் சென்று சந்திப்பாரா? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


Thaamarai Tv



Tags:    

Similar News