ஏ.சி. வசதியுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி.!

ஏ.சி. வசதியுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி.!

Update: 2021-02-19 18:24 GMT

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பேருந்துகளில் ஏ.சி. வசதி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 24 அல்லது 30 டிகிரி செல்சியஸ் அளவிலேயே ஏசி வசதியை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து கழகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் ஏசி வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏசி பேருந்துகளில் 63 வயதான நபர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே போன்று இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.
 

Similar News