தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!

தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!

Update: 2020-12-12 17:35 GMT

தருமபுரி அடுத்துள் தொப்பூர் கணவாய் பாலத்தில் சிமெண்ட் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி முன்னால் சென்ற 11க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தருமபுரியில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது பாளையம்புதூர் சுங்கச்சாவடியை கடந்து லாரி வேகமாக சென்றதாக தெரிகிறது. இதனிடையே தொப்பூர் கணவாய் பாலத்தைக் கடக்கும்போது சிமெண்ட் பாரம் தாங்காமல் லாரியின் பிரேக் பழுதானதாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற டாடா ஏஸ் வாகனம் மீது மோதி இழுத்துச் சென்றுள்ளது. அதே நேரம் சாலையில் வலது ஓரமாக சென்று கொண்டிருந்த 11 கார்கள், 2 இருசக்கர வாகனங்களை லாரியின் கண்டெய்னர் பகுதி பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் நசுக்கியவாறு சிறிது தூரம் இழுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதில் கார்கள் உருக்குலைந்து போனது. விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார், போக்குவரத்தை சீர் செய்து, விபத்துக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது முதல் விபத்து இல்லை, இது போன்று பல முறை தொப்பூர் கணவாயில் விபத்து ஏற்படுகிறது. பல உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளது. இது போன்று மேலும் விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்காக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

Similar News