வனத்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்ன தெரியுமா?

வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற குழுக்களை அமைக்க வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-12 08:59 GMT

வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற குழுக்களை அமைக்க வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப் பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்வது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவதற்கு தொடர்பாக முதன்மை வன பாதுகாவலர் குழு ஒன்றை அமைத்ததாக கூறிய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அறிக்கையை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது, மேலும் வனப்பகுதியில் ந்நிய மரங்களை அகற்றுதல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் பணிக்கு தனித்தனி குழுக்களை அமைக்க முதன்மை, தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவிடப்பட்டு நீதிபதிகள் விசாரணையை 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



Source - Polimer News 

Similar News