ஜெய்பீம் படத்தில் குறவர்களை திருடனாக காட்டியதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: சூர்யா வீடு முன்பு கொட்டும் மழையிலும் போராட்டம்!
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய்பீம். இப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை சர்ச்சையில் மாட்டிக்கொண்டுள்ளது. முதலில் வன்னியர்களின் அக்னி குறியீடு பொருத்தப்பட்ட காலண்டர் வைக்கப்பட்ட காட்சியை எதிர்த்து தமிழகத்தில் வன்னியர்கள் போராட்டம் நடத்தினர்.

இதன் பின்னர் அந்த காட்சி மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் கிறிஸ்துவ வீட்டில் இந்து கடவுளான லட்சுமி காலண்டர் பொருத்தப்பட்டிருந்தது. அதற்கும் தமிழகத்தில் பெரும்பாலான இந்துக்கள் சூர்யாவுக்கு கண்டனங்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்தனர். இந்நிலையில், மீண்டும் குறவர் சமூதாய மக்களை திருடனாக காட்டப்பட்டதாக அச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசும்போது, ஜெய்பீம் படத்தில் மற்ற சமூதாய மக்கள் இழிவுப்படுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் நரிக்குறவர்கள் என்று தவறாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தமிழ் மண்ணின் குறவர்கள். எங்களை திருடனாக காட்சிப்படுத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். சென்னையில் உள்ள நடிகர் சூர்யா இல்லம் முன்பு கொட்டும் மழையிலும் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். எனவே உடனடியாக சூர்யா எங்க சமூதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source, Image Courtesy: Twitter