டயர் பற்றாக்குறையால் தீபாவளிக்கு பேருந்து சேவைகள் முடங்குமா? - கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கம்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் தேவையான அளவு டயர்கள் இருக்கின்றதால் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க முடியும் என்றும், பேருந்து டயர் பற்றாக்குறையால் சேவை பாதிக்கும் என்று வெளியான செய்தி உண்மை இல்லை என்று போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா விளக்கம் கொடுத்துள்ளார்.;

Update: 2021-10-28 02:23 GMT
டயர் பற்றாக்குறையால் தீபாவளிக்கு பேருந்து சேவைகள் முடங்குமா? - கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கம்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் தேவையான அளவு டயர்கள் இருக்கின்றதால் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க முடியும் என்றும், பேருந்து டயர் பற்றாக்குறையால் சேவை பாதிக்கும் என்று வெளியான செய்தி உண்மை இல்லை என்று போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா விளக்கம் கொடுத்துள்ளார்.

இது பற்றி தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களின் தீபாவளி சிறப்பு பேருந்து சேவை டயர் பற்றாக்குறையால் பாதிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உண்மை இல்லை.

புதிய டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்களின் தற்போதைய இருப்பு நிலை போக்குவரத்துக் கழகங்கள் அனைத்து பேருந்துகளையும் இயக்கத் தேவையான 'டயர் புளோட்'டை விட அதிகமாக உள்ளது. எனவே தடையின்றி பேருந்துகளை இயக்க முடியும்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Business Standard


Tags:    

Similar News