தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள்.. மாவட்டங்கள் இடையே பேருந்து சேவை.!

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட மேலும் ஒருவார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது.

Update: 2021-07-04 03:56 GMT

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட மேலும் ஒருவார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம்.


 



தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுகிறது. ஆனால் திருவிழா மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.




 


வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள் திறக்கும் நேரமும் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News