கோவில் குளத்தை ஆக்கிரமித்து சர்ச்.. தட்டிக்கேட்ட ஆதி திராவிடர்களை சாதிப் பெயர் சொல்லி திட்டிய கிறிஸ்தவர்கள்.!

கோவில் குளத்தை ஆக்கிரமித்து சர்ச்.. தட்டிக்கேட்ட ஆதி திராவிடர்களை சாதிப் பெயர் சொல்லி திட்டிய கிறிஸ்தவர்கள்.!

Update: 2021-01-05 12:43 GMT

உளுந்தூா்பேட்டை அருகே மதம் மாறிய கிறிஸ்தவர்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சர்ச் கட்டி இந்துக்களை தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றி அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் ஊரை விட்டு வெளியேறவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருந்தை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் ஆதி திராவிடர் சமூகத்தினரில் பலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அங்குள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து தேவாலயம் கட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். 
 

மேலும் இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் இடத்தையும் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறுகின்றனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறையில் புகார் அளித்து அவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்தவர்கள் இந்து ஆதி திராவிடர்களை சாதி பெயரை சொல்லி இழிவாகப் பேசுவதும, தாக்குவது, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை சேதப்படுவத்து என்று தொந்தரவு செய்துள்ளனர்.

 

#கள்ளக்குறிச்சி மாவட்டம் #திருநாவலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள இருந்தை கிராமத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக...

Posted by Hindu Munnani on Monday, 2 November 2020

 

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதையடுத்து வீரபாண்டியன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பிச்சை அந்தோணிராஜ், அற்புதராஜ், ஜக்கு, ஜெரால்ட்கிறிஸ்டி, அந்தோணிசாமி, அருள்தாஸ் உள்ளிட்ட 16 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மறு தரப்பின் சார்பில் பிச்சை அந்தோணிராஜ் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டியன், கண்ணன், ரத்தினம், சுப்ரமணி, முத்துகிருஷ்ணன் ஆகியோருடன் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இது பற்றி கிறிஸ்தவர்கள் பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக இந்து ஆதி‌ திராவிடர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு ஊரை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளனர்.   

இந்துக்கள் சிறுபான்மையினரானால் அவர்களது உரிமைகளும் உடைமைகளும் எவ்வாறு தட்டிப் பறிக்கப்படும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.

Similar News