'கடவுள் அறிய' என்று பதவியேற்றுக்கொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.. உளமார என்று பதவியேற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2021-05-11 11:06 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


 



முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர் அதிமுக, திமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.




 


இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 'உளமார' என்று கூறினர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 'கடவுள் அறிய' என்று கூறியும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Similar News