அடையாறு புற்றுநோய் மையத் தலைவர் Dr. சாந்தா காலமானார்!

அடையாறு புற்றுநோய் மையத் தலைவர் Dr. சாந்தா காலமானார்!

Update: 2021-01-19 09:08 GMT

அடையாறு புற்றுநோய் நிறுவனத் தலைவரும், மூத்த புற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் V. சாந்தா செவ்வாய்க்கிழமை (இன்று) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93. திங்கட்கிழமை இரவு அவர் கொஞ்சம் அசவுகரியம் இருப்பதாக புகார் அளித்த பின்னர், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் ரத்த நாளத்தின் உள்ள ஒரு அடைப்பை அகற்ற முயன்றனர்.

அதிகாலை 3: 55 மணிக்கு அவர் காலமானார். டாக்டர் சாந்தா சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர் கேன்சர் அடையாறு கேன்சர் நிறுவனத்தில் ஒரு மருத்துவ அதிகாரியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் புற்றுநோயியல் துறைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1927இல் பிறந்த அவர் தனது எம்பிபிஎஸ் படிப்பை 1949இல் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் பெற்று மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறில் நிபுணத்துவம் பெற்றார்.

1954ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் உருவாக்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மையத்தில் , மருத்துவத்தில் மேற்படிப்பு படித்த பின்னர் 1955இல் மருத்துவ அதிகாரியாக பதவியேற்றார்.  மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையில் பயிற்சியை 1960களில் கனடாவிலும் இங்கிலாந்திலும் பெற்றார். 1954ல் 12 படுக்கைகளுடன் இருந்த மையம், தற்பொழுது 423 படுக்கைகளுடன் நாடு முழுவதும் இருந்து நோயாளிகளை கொண்டுள்ளது.

டாக்டர் சாந்தா தன்னுடைய தன்னலமற்ற சேவைக்காக பத்மபூஷன் ,பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் மாக்சே விருது உள்ளிட்ட பலவற்றை பெற்றுள்ளார்.  பத்து வருடங்களுக்கு முன்னால் அவருக்கு ஒரு பக்கவாதம் ஏற்பட்ட பொழுதும், வயது தொடர்பான பிரச்சனைகள் இருந்தபொழுதும் மருத்துவமனையில் சேர்க்கும் வரை அவர் சுறுசுறுப்பாக இருந்தார் என்று அவருடன் வேலை பார்க்கும் சக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News