பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 11.97 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விவசாயம்.!

பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 11.97 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விவசாயம்.!

Update: 2020-12-11 13:42 GMT

உத்தரவாதத்துடன் கூடிய பயிர்க் காப்பீட்டை வழங்கி, வேளாண் உற்பத்திக்கு  ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 2016-ம் ஆண்டு கரீப் பருவத்தின்போது, பிரதமர் பசல் பீமா யோஜனா என்கிற பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. 

எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் இழப்பு, சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையில், நீடித்த வேளாண் துறை உற்பத்தியை ஊக்குவிப்பதே பிரதமரின் இட்டத்தின் நோக்கமாகும். விவசாயிகள் நவீனமான, புதுமையான வேளாண் முறைகளைப் பின்பற்றுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். 

குறுகிய கால பருவ வேளாண் நடைமுறை கடன்கள், குறிப்பிட்ட பயிர்களுக்கான கிசான் கடன் அட்டைகள் மூலம் கடன் பெற்றுள்ள  விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். பாசன வசதி இல்லாத பயிர்களுக்கு மத்திய அரசு மானியம் 30 சதவீதமாக இருக்கும். பாசன வசதி உள்ள பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களுக்கு இது 25 சதவீதமாக வழங்கப்படும். 

வேளாண் பயிர் கடன்கள் வாங்கியுள்ள விவசாயிகள், அதே வங்கியிலேயே காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில், 11.97 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள வேளாண் பயிர்கள் பிரதமர் பசல் பீமா யோஜனாவின் கீழ் இதுவரை,  ரூ.7705.17 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளன. 

செலுத்தப்பட்ட மொத்த பிரிமியம் ரூ.2605 கோடியாகும். இதில், மத்திய அரசு ரூ.884 கோடி வழங்கியுள்ளது. தமிழக அரசு ரூ.1601 கோடியும், விவசாயிகள் ரூ.119.27 கோடியும் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் வரும் ரபி பருவத்துக்கு பிரிமியத்தைச் செலுத்துமாறு விவசாயிகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வேர்க்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.409.50 வீதம் பிரிமியம் செலுத்துவதற்கு கடைசி நாள் அடுத்த ஆண்டு பிப்ரவிரி 1 ஆகும். 

தரிசு நில நெல்-கொண்டைக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.192 பிரிமியத்தை பிப்ரவரி 15-ம் தேதிக்கு முன்னதாக செலுத்த வேண்டும். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.511.5 வீதம் பிரிமியம் செலுத்த  கடைசி நாள் பிப்ரவரி 22-ம் தேதியாகும்.  அதேபோல மக்காச்சோளம், பருப்பு வகைகள், எள், கரும்பு, வாழை, வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றுக்கும் உரிய பிரிமியம் செலுத்தி திட்டத்தில் இணையுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

மத்திய அரசின் இத்தகைய பல்வேறு முன்முயற்சிகள் மூலம், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இது முக்கிய ஆதரவாக  இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News