வேளாண் சட்டம்.. தமிழக விவசாயிகளை எந்த விதத்திலும் பாதிக்காது.. முதலமைச்சர் பழனிசாமி தகவல்.!

வேளாண் சட்டம்.. தமிழக விவசாயிகளை எந்த விதத்திலும் பாதிக்காது.. முதலமைச்சர் பழனிசாமி தகவல்.!

Update: 2020-12-03 17:11 GMT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சடடங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 8 நாட்களாக பஞ்சாப் விவசாயிகளை காங்கிரஸ் தூண்டிவிட்டு செய்து வருகிறது. மேலும், சில மாவோயிஸ்டுகள் போன்றவர்களும் ஈடுபட்டுள்ளனர் என பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டி வந்தது.


இதனையடுத்து விவசாய தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.


இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேவையில்லை எனில் விற்பனை ஒப்பந்தத்தில் இருந்து விவசாயிகள் விலகிக் கொள்ளலாம் என சட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் விவசாயிகளிடம் பொய் பிரச்சாரத்தை தூண்டி விடுகிறது. வேளாண் சட்டங்களால் பாதிப்பு வந்துவிடும் என்று வெற்று அரசியல் லாபத்திற்காக பேசுவதை விவசாயிகள் கண்டுகொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது. விவசாயிகள் தங்களுடைய பொருட்களை தாங்கள்தான் விலை நிர்ணயம் செய்வார்கள் என்பது இந்த சட்டத்தின் விதியும்கூட. இதனை ஒரிஜினல் விவசாயிகள் ஆதரிப்பார்களே ஒழிய அதனை எதிர்க்மாட்டார்கள்.

Similar News