சிதம்பரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆய்வு செய்யும் அதிமுக எம்.எல்.ஏ.,

சிதம்பரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆய்வு செய்யும் அதிமுக எம்.எல்.ஏ.,

Update: 2020-12-04 11:37 GMT

தமிழகத்தில் நிவர் புயலை தொடர்ந்து தற்போது புரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டிதீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.


அதே போன்று சிதம்பரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை 34 சென்டி மீட்டர் மழைக்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால் சிதம்பரம் நடராஜர் கோவில் உட்பட பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.


இந்நிலையில், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அண்ணாமலை நகர் பேரூராட்சி 13 வது வார்டு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அப்பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு வசிக்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். மேலும், உணவு, குடிநீர், போர்வை உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறார். இவரது சேவைக்கு அந்த தொகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Similar News