பெண்களின் முன்னேற்றத்திற்காக பா.ஜ.கவில் இணைந்த பைக் ரேசர் - டாப் கியரில் செல்லும் பா.ஜ.க

பா.ஜ.கவில் இணைந்த பைக் ரேசர் மற்றும் விளையாட்டு துறை ஜாம்பவானாக ஆலிஷா அப்துல்லா.

Update: 2022-09-05 00:10 GMT

தமிழக பா.ஜ.கவில் தற்போது சினிமா சின்னத்திரை நடிகர்கள் முதல் பல்வேறு விளையாட்டு துறையினரின் பிரபலங்களும் இணைத்துக்கொள்ள முன் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல கார் மற்றும் பைக் ரேஸ் வீராங்கனியான அலிஷா அப்துல்லா பா.ஜ.கவில் தன்னை இணைத்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, V.P.துரைசாமி மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்த அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.


அவர் பதிவிட்டு இருந்த ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் பா.ஜ.க குடும்பத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சி அளிக்கிறேன். எனக்கு அண்ணாமலையும், அமர் பிரசாந்த் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகத்தான் நான் பா.ஜ.கவில் இணைந்து இருக்கிறேன். பா.ஜ.கவில் இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்தவற்றை செய்வேன்" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.


பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் தன்னுடைய பக்கத்தில் ஆலியா அப்துல்லாவை பாராட்டுகிறார். குறிப்பாக விளையாட்டு துறையின் உண்மையான ஜாம்பவான், அற்புதமான வீரர் அலிஷா அப்துல்லாவை பா.ஜ.கவுக்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. ஆண்கள் அதிகம் நிறைந்த விளையாட்டு துறையில் தடைகளை உடைத்து ஊக்கம் அளிக்கும் பெண்ணாக விளங்குவது மட்டுமின்றி, முத்திரையின் பதித்துள்ளார். விளையாட்டு துறையில் பிரதமர் மோடி ஆற்று வரும் பங்கிற்காக தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளார் என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: ABP News

Tags:    

Similar News