தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறப்பு.. உற்சாகமுடன் செல்லும் மாணவர்கள்.!
தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறப்பு.. உற்சாகமுடன் செல்லும் மாணவர்கள்.!;
தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகமுடன் செல்வதை பார்க்க முடிகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டது. இதனிடைய தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில், பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதே போன்று இன்று முதல், கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லுரிகளும் வாரம் 6 நாட்கள் செயல்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கான விடுதிகளும் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.