அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.1,000 இல்லையாம்: HHH உள்ளவர்களுக்கு மட்டும்தானாம்.!
திமுக ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தனர். அதன்படி ஆட்சிக்கு வந்த திமுக கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இன்றுவரை அறிவிப்பு வெளியிடாமலே உள்ளது.

இந்நிலையில், பணம் அளிப்பது குறித்து நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் பரபரப்பான ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறியிருந்தார்கள் அது பற்றி விசாரிக்கச் சென்றால் கொண்டைக்கடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொண்டைகடலை போராத கார்டுக்கு இல்லை எனறு கூறுகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் நான்கு எழுத்துக்கள் கொண்ட (NPHH) நபர்களுக்கு இல்லை என்றும், மூன்று எழுத்துக்கள் கொண்ட (HHH) நபர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறுகிறார்கள். கொடுத்தால் அனைத்து பெண்களுக்கும் சமமாக கொடுங்கள் இல்லையென்றால் கொடுக்காதீர்கள். இப்படிக்கு ஒரு பெண். முதல்வர் ஸ்டாலின் இதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.