சட்டசபையில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை: சபாநாயகர்.!

தமிழக சட்டசபை வருகின்ற ஜூன் 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. அந்த கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

Update: 2021-06-10 04:27 GMT

தமிழக சட்டசபை வருகின்ற ஜூன் 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. அந்த கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

இந்நிலையில், 16வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் 21ம் தேதியன்று தொடங்குவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் குறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு சபாநாயகர் மு.அப்பாவு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை வருகின்ற ஜூன் 21ம் தேதி காலை மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார்.

அவர் உரை நிகழ்த்திய பின்னர், சட்டமன்ற அலுவல் குழு கூட்டம் நடைபெறும். மேலும், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். கொரோனா பரிசோதனையில் தொற்றில்லை என்ற முடிவு வந்தவர்கள் மட்டுமே சட்டசபையில் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News