ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்.. முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்.!

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2021-04-26 02:54 GMT

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கோரிய வழக்கில், உச்சநீதிமன்ற விசாரணை பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி இன்று காலை 9.15 மணியளவில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பெறுவதில் பல்வேறு மாநிலங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரிய வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்துகிறது.


 



அந்த சமயத்தில் தமிழக சார்பாக எப்படி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பதற்காக இன்று அனைத்துக் கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்த நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், அதிமுக, பாமக, திமுக, பாஜக, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

Similar News