ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் புதிதாக மாற்று மத வழிபாட்டுத்தலங்கள் அமைக்கக்கூடாது: இந்து அமைப்பு புகார்!

Update: 2022-06-19 13:01 GMT

அகில பாரத இந்து மகாசபா மாநிலத்தலைவர் த.பாலசுப்பிரமணியன் தலைமையிலான மாநகர தலைவர் ராஜேஷ் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கள் உட்பட பலர் நாகர்கோயில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோயில் ஆசாரிபள்ளத்தில் மிகவும் பழமை வாய்ந்த காசநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதனிடையே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் கையகப்படுத்தும்போது அந்த இடத்தில் இருந்த இந்து ஆலயங்களையும் அரசே தினந்தோறும் பூஜையுடன் பராமரித்து வந்தது.

மேலும், இந்த இடம் திருவிதாங்ககூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டவை ஆகும். இங்கு இந்து ஆலயங்களுக்கு சொந்தமான இடம் என்பதால் அரசே இந்த ஆலயத்தை பராமரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாறிய பின்னரும் கோயில் பூஜைகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு புதிதாக கிறிஸ்தவ ஜெபக்கூடமோ அல்லது மற்ற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக்கூடாது. எனவே மருத்துவமனையில் இதற்கு முன்பு இருந்த நடைமுறைகள் தற்போது தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News