நெல்லையில் ட்ரோன் கேமரா மூலமாக ஊரடங்கை கண்காணிக்கும் போலீசார்.!
தமிழகத்தில் ஊரடங்கை முன்னிட்டு பல்வேறு வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் ட்ரோன் கேமரா உதவியுடன் போலீசார் ஆட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்கை முன்னிட்டு பல்வேறு வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் ட்ரோன் கேமரா உதவியுடன் போலீசார் ஆட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், நீதிமன்றம் மற்றும் பிரதான பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவித்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது போன்ற சமயங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்களுக்கு காலை காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற சமயங்களில் வெளியில் நடமாடினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனிடையே ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும்படி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் ட்ரோன் கேமரா உதவியுடன் மக்கள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.