அம்மா உணவகம் சூறையாடல்.. பா.ஜ.க. தலைவர் கண்டனம்.!

சென்னை, முகப்பேரு பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் புகுந்து உணவுகளை சேதப்படுத்திய, திமுகவின் அராஜாகத்துக்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-04 10:50 GMT

சென்னை, முகப்பேரு பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் புகுந்து உணவுகளை சேதப்படுத்திய, திமுகவின் அராஜாகத்துக்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.




 


இது பற்றி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்மா உணவகம் ஏழை மக்கள் பசியுடன் வாடக் கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய முத்தாய்ப்பு திட்டமாய் கொண்டு வரப்பட்டது. மிக மிக குறைவான விலையில் ஏழை மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு உணவு அளித்து அம்மா உணவகம் சேவை செய்து வருவதை அனைவரும் அறிந்ததே.


 



சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகள், விலைப்பட்டியல் போன்றவற்றை, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அடித்து நொறுக்கிய வீடியோ காட்சிகளைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி நடைபெற கூடாது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News