முழு ஊரடங்கிலும் தொடர்ந்து செயல்படும் அம்மா உணவகங்கள்.!

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

Update: 2021-05-10 09:44 GMT

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

அம்மா உணவகம் மூலமாக தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு வருகின்றனர். முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்ட போதிலும் வழக்கம் போல அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வரும் என அரசு அறிவித்திருந்தது.


 



அதன்படி, சென்னையில் மட்டும் 200 அம்மா உணவங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர்கள் உணவத்திற்கு சென்று உணவுகளை வாங்கியும், சாப்பிட்டும் செல்கின்றனர்.

அம்மா உணவகத்தால் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மற்ற உணவகத்தில் உள்ள விலையை விட மிகவும் குறைவாக அம்மா உணவகத்தில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News