ஒட்டன்சத்திரம்: அம்மா உணவகத்தில் பணியாற்றிய 6 பேர் பணி நீக்கம்.. திமுகவை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்.!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அம்மா உணவகம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதில் பணிபுரிந்து வந்த பெண்களை நீக்கிவிட்டு, திமுகவை சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கியுள்ளதால் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அம்மா உணவகம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதில் பணிபுரிந்து வந்த பெண்களை நீக்கிவிட்டு, திமுகவை சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கியுள்ளதால் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 12 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உணவகத்தின் மூலமாக தினமும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றிய 12 பெண்களில் 6 பெண்களை நீக்கியுள்ளனர். நேற்று இரவு பணி முடிந்தபோது அம்மா உணவகத்தின் சாவியை நகராட்சி ஊழியர்கள் கேட்டு வாங்கியுள்ளனர். அப்போது அவர்களை நீக்கியதை சொல்லவில்லை பெண்கள் தெரிவித்தனர்.
அதே போன்று இன்று காலை 3 மணிக்கு வழக்கம் போல் பெண்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது அம்மா உணவகத்தில் திமுகவை சேர்ந்த பெண்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டதற்கு தங்களை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும், இனிமேல் யாரும் வேலைக்கு வரவேண்டாம் என கூறியுள்ளார்.
இதனிடையே பெண்கள் அனைவரும் அம்மா உணவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கூறும்போது, கடந்த ஆறு ஆண்டுகளாக நாங்கள் பொதுமக்களுக்காக வேலை பார்த்து வந்தோம். அதுவும் கொரோனா காலகட்டத்தில் தங்களின் உயிர்களை பணயம் வைத்து வேலை பார்த்துள்ளோம் என கூறினார்கள்.
மேலும், திமுகவை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு தற்போது வேலையை வழங்கியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாங்கள் இனிமேல் குடும்பத்தை எப்படி நடத்துவோம் என்று கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.