அம்மா கிளினிக் திறப்பு விழா.. சேலத்தில் இ.பி.எஸ்., தேனியில் ஓ.பி.எஸ்.!

அம்மா கிளினிக் திறப்பு விழா.. சேலத்தில் இ.பி.எஸ்., தேனியில் ஓ.பி.எஸ்.!

Update: 2020-12-17 12:16 GMT

சேலம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் இலத்துவாடியில் மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இல்லதுவாடியில் அம்மா கிளினிக் திறப்பால் கவர்பனை, திட்டசேரி, கிழக்கு ராஜபாளையம் மக்கள் பயனடைவர். சேலம் மாவட்டத்தில் 100 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படுகிறது.

இதில் முதற்கட்டமாக 34 அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது. அதே போன்று தேனி மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக், புதிய அரசு கட்டடங்களையும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்த மாநிலம் தமிழகம்.

கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே? தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றது என விமர்சித்தார். இன்று அரியலூர், பெரம்பலூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News