அம்மன் கோயிலில் சிலை உடைப்பு - திட்டமிட்டு நடக்கும் தொடர் சம்பவங்கள்!

Update: 2022-10-31 03:40 GMT

அம்மன் சிலை சேதம் 

திண்டுக்கல் மாவட்டம் சேவியர் பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலில், அக்டோபர் 27ல், அம்மன் சிலை சிதிலமடைந்த நிலையில் இருந்ததை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் புதுப்பிக்கப்பட்டு , கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு அம்மன் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அக்டோபர் 27 அன்று காலை, அவற்றில் ஒன்று உடைந்த நிலையில் காணப்பட்டது.

மூன்று பேர் கைது 

விசாரணையில் இரவு நேரத்தில் சிலர் வேண்டுமென்றே சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். அஜீஸ் (22), சிராஜுதீன் (25), வீர கவுதம் (24) ஆகியோர்தான் சிலையை நாசம் செய்தவர்கள் என்று போலீசார் கண்டுபிடித்தனர். மூவரையும் கைது செய்து, அவர்களின் நடவடிக்கைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கோயில் மற்றும் சிலைகளை இழிவுபடுத்துதல் தொடர்கிறது. முஸ்லீம் ஒருவர் கடந்த காலத்தில் கோவில் தேருக்கு தீ வைத்து எரித்துவிட்டு, தான் குற்றவாளி என்றும், வாய்ப்பு கிடைத்தால் அதை மீண்டும் செய்வேன் என்றும் வீடியோவில் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று போலீசார் கூறியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

Input From: Hindu Post

Similar News