அம்மன் சிலையை திருடிய 3 நபர்கள்... 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் அம்மன் சிலையை திருடிய மூன்று நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கிருதாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஒரு கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு சிலையை ஒரு கும்பல் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த சம்பவம் சார்பாக அங்கு உள்ள காவல் நிலையத்தில் வழக்கு மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளான ஐன்ஸ்டீன், திவாகர், நவீன் ஆகியோரை கைது செய்தார்கள்.
இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முடிவில் மூன்று பேருக்கு தல 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 அபராதமும் விதித்து 2015 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார்கள். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த மேல்முறையீடு வழக்கு செல்லாது என்றும் கூறப் பட்டிருக்கிறது. விசாரணையின் போது மனுதாரர்கள் மூன்று பேர் மீதான வழக்கு உரிய சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே தவறு அவர்கள் தான் செய்தார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதன் காரணமாக மூன்று பேரையும் சிறையில் அடைக்க தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar