காஞ்சிபுரம்: அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் அகற்றம்!

Update: 2022-01-01 13:19 GMT

காஞ்சிபுரம் : அம்மா உணவகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் அகற்றபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டங்கலுள் ஒன்று "அம்மா உணவகம்" . இத்திட்டத்தின் மூலம் பல ஏழை எளிய மக்கள் அன்றாடம் தங்களது  பசியை மலிவான விலையில் விரட்டி வருகின்றனர். இத்திட்டம்  அனைவராலும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், அம்மா உணவகங்களில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது புகைப்படத்தை ஆளுங்கட்சி நிர்வாகிகளின் அழுத்தத்தின் பேரால், புகைப்படம் அகற்றப்பட்டு வருவதாக அ.தி.மு.கவினர் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில்,


காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பெயர்ப்பலகையில் இருந்து ஜெயலலிதா  அவர்களது புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. தகவலறிந்த  அ.தி.மு.கவினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


"படத்தை வை ! அம்மாவின் படத்தை வை ! " என்ற  கோஷங்களை  எழுப்பினர். அதிமுகவினரின் தீவிர போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது  புகைப்படம் பொருத்தப்பட்டது. 

News J


Tags:    

Similar News