விருத்தாலசத்தில் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.86,500 பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை.!

வைக்கோல் வாங்குவதற்காக எடுத்து செல்லப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-03-05 05:29 GMT

வைக்கோல் வாங்குவதற்காக எடுத்து செல்லப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் பகுதியில் வட்டாட்சியர் செந்தில் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.




 


அப்போது வைக்கோல் மற்றும் மாடுகளை வாங்குவதற்காக, ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தருமன் என்பவர் 86,500 ரூபாயை எடுத்து சென்றுள்ளார். அப்போது வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பணத்தை விருத்தாச்சலம் தாசில்தாரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Similar News