1000 ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியரின் பெருமாள் சிலை கண்டெடுப்பு!

Update: 2022-10-20 02:00 GMT

சிவகங்கை அருகே 1000ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இந்த சிலை 3துண்டுகளாக உடைந்து காணப்படுகிறது. 3அடி உயரம் கொண்ட சிலையின் தலையில் கிரீட மகுடம் தரித்தும், மார்பில் ஆபரணங்களும், முப்புரி நூலும் தெளிவாக சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

இடையில் இடைக்கச்சை கால்வரையிலும் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கால்களிலும் வீரக்கழலை அணிந்த படியும், கைகள் நான்கும் புஜங்களுக்கு கீழாக முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது. சிலையின் இடதுபுறம் ஒரு சங்கு தெளிவாக தெரிகிறது. வலதுபுறம் சக்கரம் சற்றே சிதைந்து காணப்படுகிறது.

இந்த சிலைகள் முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பார்க்கும்போது இந்த பகுதியில் ஒரு பெருமாள் கோவில் இருந்திருக்க வேண்டும்.

பின்னாளில் படையெடுப்பினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அது அழிந்து போயிருக்கலாம். தற்போது இந்த சிலை வழிபாட்டில் இருந்து வருகிறது. மேலும் இந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினர். 

Input From: DailyThanthi




Similar News