ஆண்டிபட்டி - உசிலம்பட்டி அகல ரயில் பாதை முடிந்தது.. சோதனை ஓட்டத்திற்கு தயார்.!

ஆண்டிபட்டி - உசிலம்பட்டி அகல ரயில் பாதை முடிந்தது.. சோதனை ஓட்டத்திற்கு தயார்.!

Update: 2020-11-27 15:24 GMT

போடி- மதுரை அகல ரயில்பாதை திட்டப் பணிகள் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கியது. மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்துள்ளது.


இந்நிலையில், தற்போது உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி இடையேயான 20 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைகிறது. இதனால் ரயில் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ஆண்டிபட்டி தேனி இடையே நடைபெற்று வரும் அகல ரயில்பாதை பணிகள் 5 மாதங்களுக்குள் முடிவடையும். 2021 22 ஆம் நிதியாண்டில் அகல ரயில் பாதை பணி ஒதுக்கீடு செய்யும் நிதி மூலமும், திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடையும். 


உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை கண்வாயில் 50 அடி வரை பாறைகள் உடைக்கப்பட்டுள்ளன. வருகின்ற 31-ம் தேதிக்குள் சோதனை ஓட்டம் நடக்கும். ஆண்டிபட்டியில் ரயில் நிலையம், பிளாட்பாரம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் சோதனை ஓட்டம் முடிந்து மக்களின் பயன்பாட்டு வந்தால் அனைத்து மக்களும் சந்தோஷப்படுவார்கள்.

Similar News