அங்கன்வாடி குழந்தைகளுக்கு பல்லி விழுந்த உணவு - சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு சிகிச்சை!
அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை அருந்திய ஒன்பது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லை ஏந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது தான் பனையங்கால் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி. பொதுவாக அங்கன்வாடியில் குழந்தைகள் பலரும் மதிய உணவை அருந்துவது வழக்கம். பல்வேறு ஏழை எளிய மக்களும் தங்களுடைய குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி சத்துணவு தரமான முறையில் வழங்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
அந்த வகையில் அதை செய்யாமல் அங்கன்வாடியில் பள்ளி விழுந்த உணவை பரிமாறி அதனால் உணவை சாப்பிட்ட ஒன்பது குழந்தைகள் தற்போது சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். சிறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் ஏன் இத்தகைய அலட்சியமான செயல்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அங்கன்வாடி மையத்திற்கு பெற்றோர் இரண்டு பேர் தங்களுடைய குழந்தைகளுக்காக அங்கு சென்று இருக்கிறார்கள். அப்பொழுதுதான் அந்த உணவில் பள்ளி இருந்து கிடப்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சாப்பிட குழந்தைகள் உட்பட ஒன்பது பெயரையும் வாகனத்தில் ஏற்றுக்கொண்டு கீழங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கீழக்கரை தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்கள். மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று குழந்தைகளை பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்பொழுது கீழக்கரை நகராட்சி தலைவர் துணைத்தலைவர் ஆகிய ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று குழந்தைகளை நேரில் பார்த்து ஆறுதலை கூறி இருக்கிறார்கள். ஏன் இப்படி அங்கன்வாடி ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுகிறார்கள்?என்று கேள்வியும் போது மக்களிடம் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Vikatan News