அண்ணா பல்கலைக்கழகம்: 1 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தம்.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி நடைபெறும்பொழுது சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

Update: 2021-04-14 11:11 GMT

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி நடைபெறும்பொழுது சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வு முடிவுகள் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ன. ஆன்லைன் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

Similar News