அடுத்த அண்ணா பல்கலை துணைவேந்தர் யார்.. வழிகாட்டுதல் குழுவை நியமித்தார் ஆளுநர்.!
புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரையில், அண்ணா பல்கலைக்கழக நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல் குழுவை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக வழிகாட்டுதல் குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.
சென்னையில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிகாலம் நேற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரையில், அண்ணா பல்கலைக்கழக நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல் குழுவை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவில், பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா, பேராசிரியர் ரஜ்ஜினி பார்த்தசாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய துணைவேந்தர் நியமிக்கின்ற வரையில் இவர்கள் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருவார்கள் எனப் கூறப்படுகிறது.