தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்!

தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2021-10-21 04:08 GMT

அந்த கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி, இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, விநாயகர், முருகன், கருவூரார், நடராஜர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் உள்ளது. மேலும், கருவறையில் உள்ள பெருவுடையார் உலகிலேயே மிகப் பெரிய சிலையாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பெருவுடையார், 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் என்று தனித்தனியான கருங்கல்லினால் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டள்ளது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று (அக்டோபர் 20) ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் செய்வதற்காக 750 கிலோ பச்சரிசி மற்றும் 600 கிலோ காய்கறிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அரிசி சாதமாக செய்யப்பட்டு பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது. வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் அன்னாபிஷேகம் முடிந்து மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News