காசி தமிழ் சங்கம் பயணம் - மாணவர்களுடன் கலந்துரையாடிய அண்ணாமலை!

காசி தமிழ் சங்க பயணத்தின் போது மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள்.

Update: 2022-11-18 03:14 GMT

காசி தமிழ் சங்கம் பயணம் நேற்று இரவு கும்பகோணம் இருந்து தொடங்குகிறது. குறிப்பாக காசுக்கு நேற்று முதல் சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவது ரயில் ஆனது ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக மாணவர்கள் 216 பேருடன் புறப்பட்ட சென்றது. சென்னையில் இருந்து வாரணாசிக்கு ரயில் வழி அனுப்புவதற்கு சென்னை ஐஐடி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கவர்னர் ரவி மற்றும் மத்தியில் இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இது முழுவதும் அரசு நிகழ்ச்சி என்பதால் மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டிய ஒரு வெற்றுப் பயணம் காசி தமிழ் சங்க பயணத்தை வெற்றிகரமாக மாற்றுவது நமது கடமை. தொடர்ந்து இன்னும் 11 ரன்கள் இயக்கப்பட இருப்பதாகவும் பா.ஜ க தரப்பில் அண்ணாமலை அவர்கள் தெரிவித்து இருக்கிறார். வரும் 19ஆம் தேதி காசியில் நடைபெறும் தமிழ் சங்க மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு தமிழகத்தில் இருந்து வருகை தந்துள்ள மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடல் போன்ற ஏற்பாடு செய்து இருக்கிறார். இது தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைய இருக்கிறது.


மேலும் தமிழுக்கு பார் சொக்க தலைவர் அண்ணாமலை இதைப் பற்றி குறிப்பிடுகையில், ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு இடையே கலந்துரையாடல்களை மேற்கொண்டார். மேலும் இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், இன்றைய பயணத்தின் போது, ​​கலந்து கொண்ட மாணவர்களுடன், காசியில் அவர்களுக்கு காத்திருக்கும் அனுபவம், இன்றைய சமூகத்தில் நமது மாணவர் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.



மேலும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து செல்லும் மாணவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை வரை ரயில் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக மாணவர்களுக்காக இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழகம் அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News