ஏப்ரல் 2ம் தேதி முதல் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்: சென்னை வானிலை மையம்.!

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

Update: 2021-03-26 08:29 GMT

தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தென் தமிழகதத்ல் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.




 


அது மட்டுமின்றி ஏப்ரல் 2ம் தேதி முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் கூடுதலாக இருக்கும்.

எனவே பொதுமக்கள் வெளியில் செல்வதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. வெயில் சமயத்தில் தோல் சம்மந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Similar News