தமிழகத்தில் இவ்வளவு வாக்குச்சாவடிகள் பதற்றமானவையா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்.!
தமிழகத்தில் இவ்வளவு வாக்குச்சாவடிகள் பதற்றமானவையா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்.!
தமிழகம் முழுவதும் 7,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த 10ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தேர்தல் எப்போது நடத்துவது என்று டெல்லியில் இருந்து முறைப்படி தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிடுவார் என தெரிகிறது.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் குறித்து கடலூரில் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். தமிழகத்தை பொறுத்தவரையில் பாதுகாப்பு பணிகள் சிறப்பானதாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்