பிரதம மந்திரி வீடு கட்டுகிறீர்களா? தமிழக முதலமைச்சர் கூடுதல் சலுகை அறிவிப்பு.!

பிரதம மந்திரி வீடு கட்டுகிறீர்களா? தமிழக முதலமைச்சர் கூடுதல் சலுகை அறிவிப்பு.!

Update: 2020-12-22 11:49 GMT

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்காக தமிழக அரசின் சார்பில் கூடுதலாக ரூ.1,805 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது பற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மத்திய அரசு பங்களிப்புடன் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016 - 2017 முதல் 2019 - 20ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.8,968 கோடி மதிப்பீட்டில், 5,27,552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 4,01,848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஒரு வீட்டிற்கான மொத்த அலகு தொகை 1,70,000 ஆக இருந்தது. தற்போது கட்டுமான பொருட்களின் விலையேற்றம் காரணமாகவும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், இந்த தொகையை வைத்து மக்கள் வீடு கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், தமிழக அரசால் ஏற்கெனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூ.50000ஐ உயர்த்தி ரூ.1,20,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் அலகு தொகை 2,40,000 கிடைக்கும்.

இந்த தொகையுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 23,040 மற்றும் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்ட ரூ.12,000 சேர்த்து மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.2,75,040 கிடைக்கும். இதற்காக தமிழக அரசால் கூடுதலாக ரூ.1805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் சுமார் 2,50,000 பயனாளிகள் பயன்பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

Similar News