ஏரியா சபைகளில் பெண்கள் இடம்பெறும் வசதி இல்லை: மாற்று விதிகளை உருவாக்குமா தமிழக அரசு?
நகர்ப்புற உள்ளாட்சி ஏரியா சபைகளில் பெண்கள், சிறுபான்மையினர் இடம்பெறுவ வசதி இல்லை மாற்று விதிகளை ஏற்படுத்துமா தமிழக அரசு.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 48.45 சதவீதம் பேர் தற்போது நகர்ப்புறங்களில் இருந்து வருகிறார்கள், குறிப்பாக 2036 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகர் புறங்களில் வாழ்வோரின் எண்ணிக்கை 60% இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக கல்வி வேலைவாய்ப்பு என மக்கள் நகர்ப்புறங்களில் குடியுரிவதை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் கிராம சபை போன்று நகர்ப்புறங்களில் ஏரியா சபை உருவாக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஏரியா சபைகள் அமைப்பதன் நோக்கம் வார்டுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரைப்பது, குறைகளை எளிதாக கண்டறிந்து தீர்வு காண்பது போன்று பணிகளை அந்த பகுதியில் வசிப்பவர்கள் மேற்கொண்டு அதற்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். பிற மாநிலங்களில் ஏற்கனவே ஏரியா சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் ஏரியா சபை நிறுவ பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த வார்டுக்கு உட்பட்ட வரும் சபையின் தலைவராக வார்டு கவுன்சிலர் இருப்பார் என்று கூறப்பட்டு இருக்கிறது.
ஆனால் மகளிருக்கு 50 சதவீதத்திற்கு குறையாமல் உள்ளாட்சி இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு, ஏரியா சபைகளில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்த வில்லை. இதன் காரணமாக மகளிர் குழு, சாலையோர வியாபாரிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட பிரதிநிதித்துவம் வழங்க விதிகள் இல்லை. கட்சிக்காரர்களும் அல்லது கூட்டணி கட்சிக்காரர்களை இதில் உறுப்பினராக நியமிக்கப் படுகிறார்கள். இந்த பதவிகளை பிடிக்க மாநில தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் தலையிடும் அளவுக்கு கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே சபைகளில் பெண்கள், வணிகர்கள், சிறுபான்மையினர் இடம்பெறும் விதிகளை மாற்றியமைக்க வேண்டும். மகளிரை உறுப்பினராக சேர்க்க வலியுறுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மேயர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் இதுவரை இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது.