அரியர் தேர்வு.. உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

அரியர் தேர்வு.. உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

Update: 2020-12-01 16:57 GMT

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்கள் எழுதவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தியிருந்தால் தேர்ச்சி அடைவார்கள் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரியர் தேர்ச்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கு விசாரணையில் இருந்த போதே ஒரு சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்ச்சி முடிவுகளை வெளியிட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது முடிவுகளை வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பி, வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அரியர் வழக்கு விசாரணையை யூடியூபில் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இனிமேல் அரியர் வழக்குகள் காணொலியில் விசாரிக்கப்படாது. நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்.

Similar News