இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறதா கண்ணகி கோட்டம்: தீர்வு என்ன?

கண்ணகி கோட்டை விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கான முயற்சியை அரசு செய்து வருகிறதா?

Update: 2022-12-12 14:04 GMT

தேனி மாவட்டத்தில் கூடலூர் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது தான் கண்ணகி கோட்டம். இங்கு தஞ்சை சேர்ந்த ஆய்வாளர் கோவிந்தராஜ் என்பவர் 1963ல் கண்டெடுக்கப்பட்ட கண்ணகி கோட்டதில் கண்ணகி சிலையின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று இந்த சிலையை முழுமைப்படுத்தி அம்மனாக தமிழக மக்கள் வழிபட்டு வந்தார்கள். இந்நிலையில் கடந்த 1976 ஆம் ஆண்டு வனத்தில் வைத்து ஆடு வெட்டியதாக இருந்த சர்ச்சையில் இன்று வரை கேரளா அரசும் கேரள வனத்துறையும் தமிழகம் பக்தர்களை கண்ணகி கோட்டத்திற்கு செல்ல விடாமல் பல்வேறு இடையூறுகளை தொடர்ச்சியான வண்ணம் ஏற்படுத்துகிறது.


தமிழக- கேரள எல்லை முழுமையாக வருகிறது. அதன் நிலையில் கண்ணகி கோட்டத்தை 1973 கேரளா தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனை பயன்படுத்தி கண்ணகி கோட்டத்தின் ஒரு பகுதியில் துர்க்கை சிலையை கேரள பக்தர்களால் நிறுவி கண்ணகி கோட்டத்தை உரிமை கொண்டாட தொடங்கினார்கள். மேலும் 1986க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்த அனுமதி அளித்தார்கள் தேனி மாவட்டத்தில் கூடலூர் பனியன் குடிப்பகுதியில் ஆறு கிலோமீட்டர் நடந்த சென்றால் கண்ணகி கூட்டத்தை அடைந்து விடலாம். சுமார் 12 அடி அகலம் கொண்ட இந்த பாதை சாலை அமைத்தால் தமிழர்கள் எளிதாக கண்ணகி கோட்டம் அடைந்து விட முடியும். ஆனால் இந்த சாலை பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஜிப் மூலம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது.


இந்த கோவில் தமிழக கேரளா எல்லைக்கு முறையான அளவீடு செய்யாததை இந்த பிரச்சனைக்கு காரணம். கேரளா அரசின் தலையிடு இன்றி தமிழக பக்தர்கள் கண்ணகிகோட்டம் சென்றுவர புதிய பாதை சீரமைக்கப்பட்டால் மக்கள் எந்தவித இடையூறும் இன்றி விரிவாக சென்று வரலாம் என்று கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவிலைக் கொண்டு முறையாக சீரமைத்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு தீர்வு எடுக்குமா? என்றும் தற்போது வரை கேட்டுக் கொண்டு வருகிறார்கள். தமிழக பக்தர்கள் நிலையில் முதற்கட்டமாக கண்ணகி கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர தேனி உதவி ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கும் படி கீழ கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் கண்ணகி கோயில் நிர்வாகி தேனி சரக ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Input & Image courtesy: Vikatan news

Tags:    

Similar News