சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா இன்று நடைபெறுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா இன்று நடைபெறுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றர்.
மார்கழி மாதம் வரும் திருவாதிரை தினத்தில் விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைப்பது என்பது ஐதீகம். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா நேற்று (டிசம்பர் 19) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போன்று கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய ஸ்தலமாக அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது. நடராஜர் கோயிலில் வருடத்தில் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையடுத்து தினந்தோறும் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸவரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் வீதி உலாவும் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (டிசம்பர் 20) நடைபெற்று வருகிறது. இதனால் இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
Source, Image Courtesy: Daily thanthi