தேசிய கீதத்தை மதிக்காத காவல் ஆய்வாளர்: அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த அவலம்!
அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்காத காவல் உதவி ஆய்வாளர்.
நாமக்கலில் கடந்த 28ஆம் தேதி என்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது தான் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தேசிய கீதத்தை மதிக்காத வண்ணம் அவருடைய செயல்பாடு இருந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.
அப்பொழுது நாமக்கலை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்து தன்னுடைய செல்போனில் பேசியபடி இருந்தார். போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக அவர் எழுந்து நின்ற வீடியோ தான் சமூக ஊடகங்களில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக இந்த வீடியோவை பதிவு செய்தவர் உடனடியாக அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்றைய அரசாங்கம் தேசிய கீதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பது போன்று கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இந்த வீடியோ பல்வேறு தரப்பில் வைரலானது. காவல்துறை ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்பது தொடர்பாக அவர் மீது பல்வேறு புகார்களும் எழுந்து உள்ளன. இதை எடுத்து உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar