ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் உணவு தரவில்லை: கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
ஆதிதிராவிடர் கல்வி விடுதிகளில் உணவு சரியில்லை என்று கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அருகே அமைந்து இருக்கிறது திராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் விடுதி. இங்கு பல ஆண்டுகாலமாக இந்த ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதி இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விடுதியில் சேர்ந்த மாணவர்கள் அதிகம் தங்கி பயின்று வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரம் இல்லை எனவும், மாணவர்களுக்கு சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க அரசு தரும் பணத்தை நிர்வாகம் தருவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விடுதி சிறந்த மாணவர்கள் ஏராளமானோர் நேற்று காலையில் சாப்பிட்ட தட்டுடன் காலை உணவாக பரிமாறப்பட்ட சாதத்துடன் அண்டாவை தூக்கிக்கொண்டு தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மாணவர்களை சமாதானப்படுத்தினார்கள். குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டு மாணவர்கள் விடுதியில் உணவு தரத்துடன் போடப்படுவது இல்லை என்று ஒரு குறையை முன் வைத்து இருந்தார்கள்.
மேலும் உணவு பட்டியலில் இருப்பது போன்ற உணவுகள் தங்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை. உணவு தொடர்ந்து தரம் இல்லாமல் தான் விநியோகப்படுவதாகவும் தங்களுடைய குறைகளை எடுத்து கூறினார்கள். இனி தொடர்ந்து தரத்துடன் உணவு வழங்கப்படும் எனவும் பட்டியலில் உள்ள உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்திருக்கிறார்கள். இதனால் சமாதானம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்று இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar