திருப்பூரில் கொள்ளையடித்த ஏ.டி.எம். இயந்திரம்.. உதிரி பாகங்கள் பெருந்துறையில் கண்டெடுப்பு.!

திருப்பூரில் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-03-01 12:58 GMT

திருப்பூரில் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏ.டி.எம். மையம் இயங்கி வந்தது. அந்த இயத்திரத்தை சில நாட்களுக்கு முன்னர் கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை காரில் கட்டி இழுத்துச்சென்றனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அங்கு கைரேகை நிபுணர்களுடன் போலீசார் சென்று தடயங்களை சேகரித்தனர். இதன் பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதனிடையே கொள்ளைக்கு பயன்படுத்திய கார், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் விட்டு விட்டு மாற்று வாகனத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை ஏற்றிச் சென்ற கொள்ளையர்கள், அதனை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு, உதிரி பாகங்களை மட்டும் பெருந்துறை அருகே சாலை அருகே வீசிவிட்டு சென்றனர்.

இதனை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று உதிரி பாகங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரியுடன் நின்ற 6 வடமாநில இளைஞர்ளை போலீசார் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News