அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.. வெற்றியுடன் திரும்பிய மாடுபிடி வீரர்கள்.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.. வெற்றியுடன் திரும்பிய மாடுபிடி வீரர்கள்.!

Update: 2021-01-14 16:57 GMT

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இனிதே நிறைவுற்றது. போட்டியில் பங்கேற்று வெற்றியுடன் மாடுபிடி வீரர்கள் சென்றனர்.


தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது. அதன் படி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 8 சுற்றுகள் போட்டி நடைபெற்றது.

523 மாடுகள் பங்கேற்றன. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வீரர்கள் மாடுகளை பிடிக்க களமிறங்கினர். போட்டியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், டிடிவி தினகரன் ஆகியோரின் மாடுகள் பங்கேற்று வெற்றி பெற்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட வீரர்கள் உற்சாகத்துடன் வீடுகளுக்கு சென்றதை காணமுடிந்தது.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது 46 மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும், 2 பார்வையாளர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

Similar News