ஜேசிபியை வாடகைக்கு விடும் ஏவிஎம் நிறுவனம்.. பல கோடி வரி ஏய்ப்பு.. சென்னையில் 10 இடங்களில் ஐடி ரெய்டு.!
ஜேசிபியை வாடகைக்கு விடும் ஏவிஎம் நிறுவனம்.. பல கோடி வரி ஏய்ப்பு.. சென்னையில் 10 இடங்களில் ஐடி ரெய்டு.!
ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது தொழிலதிபர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல வருடங்களாக வரி ஏய்ப்பு செய்து வந்த காரணத்தினால் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் மதுரை ஹெரிடேஜ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத வகையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இதில் பல கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வேறு கணக்குகளுக்கு மாற்றியதாக தெரிகிறது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 10 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தற்போது திடீர் சோதனையால் அந்நிறுவனம் கலக்கத்தில் உள்ளது. சோதனை முழுமையாக முடிந்த பின்னரே எவ்வளவு வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.