''தேவையற்ற ரயில் பயணங்களை தவிர்த்திடுங்கள்'' பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வலியுறுத்தல்.!
தேவையற்ற பயணங்களையும் கூட்டமாக செல்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் கூறியதாவது: முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், சோப்பு போட்டு கைகளைக் கழுவுதல் உள்ளிட்டவற்றை ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் கடைபிடியுங்கள்.
மேலும், தேவையற்ற பயணங்களையும் கூட்டமாக செல்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
ரயில் பயணத்தின்போது, சோப்பு, சானிடைசர், உணவு, தண்ணீர் உள்ளிட்டவை சொந்தமாக எடுத்து செல்வது மிகவும் நன்று. கொரோனா பரவுவதை தடுக்க அனைத்து பயணிகளும் ரயில்வேத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.